பல சில


                              பல சில
                  தடுப்புச் சங்கிலியால் கட்டுண்டுகிடக்கும்
                           மனிதனின் மனிதாபிமானக் கரங்களில்.
                     இன்னும் பல்லாயிரமாண்டுகளுக்கான தண்டனை
                           பூட்டுகளாக தொங்கவிடப்பட்டுள்ளது.

                     சாதி, மதம், இனம்
இப்படி பல சில;
அங்காடி பொருள் போல்
எங்கெங்கு நோக்கினும்
நீக்கமர இருப்பதனால்
பூட்டுகலுகான சாவி
மறைத்துவைகப்படுள்ளது.

அரசியல் மேடைகளில்
இடம் பிடித்து,
அரசியல் கிரீடங்களை தலையில்
சூடிக்கொள்ளும்முன் ,
சில பல நல்லெண்ங்களை
தனக்குள் தானே விதைத்துகொள்வது நல்லது.

குண்டுவெடிப்புகள் சாதாரணம்,
ஊழல் காற்றுபோல் அத்தியாவசியம்,
பணக்காரர்கள் ஏழைகளை விழுங்குவதும் இயல்பு.
அத்தகைய ஏழைகளிலும் ஆயிரம் பிரிவினை கண்டு,
அதனிலும் மேலோர் கீழோர்;
இதைவிட ஏழைகளின்
முன்னேற்றம் எதுவாக இருக்கும்.

நம்மை நமக்கே படம்பிடுதுக்காட்டிவிட்டால்
கோபம் வரும்                                       
அது இயல்பு.
இயல்புகளை மீறிய செயல்களில்
நம்பிக்கை கொண்டுள்ள நமக்கு.
அந்த இயல்பு இயலாமையே என்பது
இன்னும் புரியவில்லையே.

என்றுமே பொதுமக்கள் என்பவர்கள்
தேர்தல் சமயங்களில், அவரவர் கட்சிக்கு
 பிரித்து கணக்கிடப்பட்டு வைதிருக்கும்
 ஓட்டு எண்ணிக்கை மட்டுமே.
ஏனென்ரால் மனசாட்சி மனிதாபிமான சங்கிலிக்குள்
       சிக்குண்டுகிடக்கிறது.

Comments

Popular posts from this blog

தாய்மை

சந்தேகம் தீர்க்கப்படுமா-1