Friday, August 21, 2015

சந்தேகம் தீர்க்கப்படுமா-1
வாழ்க்கைக்கு கல்வியே அடிப்படை ஆதாரம். வெரும் ஏட்டுக்கல்வியையும் தாண்டி அநுபவ அறிவும் கேட்டறியும் திறனும் நம் தேடுதலையும் கற்றலையும் செப்பனிடவைக்கும். நம்மை போன்ற சாமானியர்களின் தீர்க்கமுடியாத சந்தேகம் இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டுமென்றும் மரம் நடுவோமென்று சொல்லும் அதிகார இயந்திரங்கள் அதை பின்பற்றுகின்றதா?
     குழந்தை தொழிலை ஒழிப்பது மிகவும் அவசியமென்பதில் அய்யம்மில்லை ,ஆனால் அத்தகைய கொடூர நிலைக்கு அவர்களை தள்ளுவதும் அவர்களை கதியற்றவர்களாய் மாற்றுவதும் எந்த அதிகார இயந்திரம்?

     பெருந்தலைவர் சத்துணவு கொண்டுவந்த காலமானது அவர்களுக்கு உணவுத் தேவையின் அவசியத்தை மட்டுமே உணர்த்திய காலம். ஆனால் மனிதனையும் மனிதாபிமானத்தையும் கொல்லும் இக்காலத்தில் யாரும் எதுவும் முக்கியமில்லை. குறுந்தொழில் புரிபவர்களும் கூலித்தொழிலாலர்களும் கடனிலும் துயரங்களிலும் மூழ்க பெரும்முதலாலிகள் கவலைகளின்றி கோடிகோடியாய் கடன் பெருவதும் , அதை திருப்பி செலுத்தாத போதிலும் மீண்டும் ரகசிய நிபந்தனைகளோடு மீண்டும் கடன் பெருவது எப்படி?

Friday, February 13, 2015இந்த திருப்பூர் புத்தகத் திருவிழாவில் கைநிறைய புத்தகங்கள். இப்பொழுது "வான்காரிமாத்தாய் "படித்துக்கொண்டிருக்கிறேன்.
வான்காரி மாத்தாய் படித்துமுடித்துவிட்டேன் . ஒரு புத்தகத்தை படிக்கும் பொழுதும் படித்துமுடித்தபொழுதும் அதன் தாக்கம் நம்மை உறங்கவிடாமல் சமுதாயத்திற்க்கான தேடலை கண்டடையச்செய்யவேண்டும். இந்த புத்தகம் என்னுள் புதிதொரு உந்துசக்தியை தந்துள்ளது.


கெட்டவார்த்தை பேசுவோம் படித்துக்கொண்டிருகிறேன்

புத்தகங்களே நமது உற்ற நண்பர்கள்

கல்வியே மனமாற்றத்திற்கான தலையாய கருவி. யார் கல்விபெருபோதும், யாரால் எத்தகைய கல்விபெருகிறோம் என்பதே முக்கியம்.கேட்கப்படுவதும், சொல்லப்படுவதும் சரியா, தவரா என்பதை பிரிதறியத் தெரியாத, தெழியாத கற்றலைத்தரும் எந்தவோரு செயலும் வெறுமையின் தொடர்ச்சியே. கோயில்களில் மட்டுமே கடவுள் வாழ்வாரென்றால் வீட்டில் இருக்கும் படங்களும் பூசையறைகளும் வீனே.
புரந்துகொள்ள முற்படுவோம் பள்ளியில் பயில்வதே கல்வியில்லையென்றும், அப்பள்ளியினால் பெருவதுமட்டுமே அறிவில்லையென்றும். பள்ளிகல்விபயிலாதவர்கள் படிப்பறிவில்லாதவர்கலாக வகைபடுத்தப்படுவதின் விளைவு அதிக பணம் பிடுங்கும் இடமே சிறந்த பள்ளியாக விளங்குவதாக நம்பவைக்கப்படிருக்கிறது.
கற்றலும் கல்வியும் மனப்பாடம் செய்தலோடு மட்டுமே தொடர்புடயதல்ல. அது வாசிப்பனுபவத்தின் தொடர் நிகழ்வேயென்பதை கற்றவர்களே கைவிட்ட அபாயகரமான உண்மை. குழந்தைகளுக்கு அன்றாடம் அவசியமான பழக்கங்களோடு வாசிப்பையும் கேட்டறிதலையும் இயல்பாக வளற அனுமதிக்கவேண்டும். எதையும் அறிந்துகொள்கின்ற அனுபவம் குழந்தைகளுக்கான இயல்பு,அதனை நாகரிகம் நல்லொழுக்கம் எனும் பெயரில் கேள்விகேட்பதையும் தன் கருத்தை பதிவுசெய்தலையும் குற்றமாகவும் மரியாதைக்கேடாகவும் உணரவைத்திருக்கிறோம். தன்சார்பு சிந்தனைகளை வளரவிடாமல் சொல்வதை கேட்கும் தலைமுறைகளை வளர்த்தெடுத்ததன் விளைவு ஆதிக்கமனோபாவத்தையும் அடிபனிந்துவிடும் கையறுநிலையையும் கற்றுக்கொடுத்ததுமட்டுமே. நல்ல புத்தகங்களை நேசிக்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம். தெழிந்த புத்தக வாசிப்பே அவர்களை சரியாக வழிநடத்தவும் சமூக அக்கறையையும் உணர்ந்துகொள்ளச்செய்யும்.புத்தங்களை வாசிப்போம் புத்தகங்களை நேசிப்போம் ,அதோடு மறுசுழற்சிமுறையையும் ஆதரித்து இயற்கையை நேசிப்போம்.

Saturday, January 24, 2015

இக்கட்டான உண்மைமனசாட்சியைக் கொன்று வாழ்வோம்
நம் எதிரில் இருபவை
     யாவும்
உயிரற்ற பொருள்களென்று.
மனிதநேயத்தை வீழ்த்துவோம்
தான் என்ற அகந்தை
    கொண்டு.
தன்னைச் சுற்றியே
உலகம் சுற்றுகிறதென்று
நினைத்திடுவோம்
உயிரற்ற உடலுக்கும்
உணர்வற்ற செயலுக்கும்
வெகுமதி எதிர்பார்க்கும்
நீசப் பிறவியாய்.
விழித்திடுவாய்!
வரும் தலைமுறையே.
இனியாவது மனிதனோடு

மனிதமும் பிறக்கட்டுமென்று.

Thursday, January 8, 2015