புத்தகங்களே நமது உற்ற நண்பர்கள் கல்வியே மனமாற்றத்திற்கான தலையாய கருவி. யார் கல்விபெருபோதும், யாரால் எத்தகைய கல்விபெருகிறோம் என்பதே முக்கியம்.கேட்கப்படுவதும், சொல்லப்படுவதும் சரியா, தவரா என்பதை பிரிதறியத் தெரியாத, தெழியாத கற்றலைத்தரும் எந்தவோரு செயலும் வெறுமையின் தொடர்ச்சியே. கோயில்களில் மட்டுமே கடவுள் வாழ்வாரென்றால் வீட்டில் இருக்கும் படங்களும் பூசையறைகளும் வீனே. புரந்துகொள்ள முற்படுவோம் பள்ளியில் பயில்வதே கல்வியில்லையென்றும், அப்பள்ளியினால் பெருவதுமட்டுமே அறிவில்லையென்றும். பள்ளிகல்விபயிலாதவர்கள் படிப்பறிவில்லாதவர்கலாக வகைபடுத்தப்படுவதின் விளைவு அதிக பணம் பிடுங்கும் இடமே சிறந்த பள்ளியாக விளங்குவதாக நம்பவைக்கப்படிருக்கிறது. கற்றலும் கல்வியும் மனப்பாடம் செய்தலோடு மட்டுமே தொடர்புடயதல்ல. அது வாசிப்பனுபவத்தின் தொடர் நிகழ்வேயென்பதை கற்றவர்களே கைவிட்ட அபாயகரமான உண்மை. குழந்தைகளுக்கு அன்றாடம் அவசியமான பழக்கங்களோடு வாசிப்பையும் கேட்டறிதலையும் இயல்பாக வளற அனுமதிக்கவேண்டும். எதையும் அறிந்துகொள்கின்ற அனுபவம் குழந்தைகளுக்கான இயல்பு,அதனை நாகரிகம் நல்லொழுக்கம் எனும் பெயரில் கேள்விகேட்பத...