POEM
இக்கட்டான உண்மை மனசாட்சியைக் கொன்று வாழ்வோம் நம் எதிரில் இருபவை யாவும் உயிரற்ற பொருள்களென்று. மனிதநேயத்தை வீழ்த்துவோம் தான் என்ற அகந்தை கொண்டு. தன்னைச் சுற்றியே உலகம் சுற்றுகிறதென்று நினைத்திடுவோம் உயிரற்ற உடலுக்கும் உணர்வற்ற செயலுக்கும் வெகுமதி எதிர்பார்க்கும் நீசப் பிறவியாய். விழித்திடுவாய்! வரும் தலைமுறையே. இனியாவது மனிதனோடு மனிதமும் பிறக்கட்டுமென்று .